Monday, June 11, 2018

IAS Exam in Tamil

          கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்திலிருந்து குடிமைப் பணி தேர்வுகளில் தேர்ச்சி அடையும் மாணவர்களின் விகிதம் குறைந்து வருகிறது.


இது கவலைக்குரிய ஒரு நிகழ்வு. தமிழகத்திலிருந்து தமிழ் மற்றும் ஆங்கில வழியில் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.

இதில் தமிழ் வழியில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உரிய வழிகாட்டுதல்கள் கிடைப்பதில்லை.

தமிழ்வழியில் சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதும் மாணவர்கள் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்.

தமிழ்மொழியில் வினாத்தாள்கள் இல்லாமை , தமிழ் மொழியில் உரிய பாட நூல்கள் இல்லாமை , ஆழமான கட்டுரைகள் தமிழில் கிடைக்காமை, தமிழ் மொழியில் விடைத்தாள்களை திருத்தம் செய்து தர வழிகாட்டிகள் இல்லாமை, தனி வகுப்புகளுக்கு மிகப்பெரிய பொருள் செலவு போன்றவை அவற்றுள் சில.

இவர்களின் தேவைகளை அறிந்து செயல்பட பல தன்னார்வலர்கள் தயாராக உள்ளனர். இதற்கு தமிழ் வழியில் சிவில் சர்வீஸ்சஸ் தேர்வு எழுதி வெற்றி பெற்ற சில நண்பர்களும் உதவி செய்ய முன்வந்துள்ளனர்.

மாணவர்கள் தங்களது தேவைகளைத் தெரிவிக்க இணைப்பில் உள்ள கூகுள் படிவத்தை பூர்த்தி செய்து தங்களின் விவரங்களைத் தெரிவிக்கவும். இந்தத் தேவைகளை ஆய்வு செய்த பிறகு மாணவர்களுக்கு உதவ சில முன்னெடுப்புகளைச் செய்ய உள்ளோம்.

மாணவர்களுக்கு உதவ ஆர்வம் உள்ள தன்னார்வலர்களும் தங்களை இப்பணியில் இணைத்துக்கொள்ளலாம்.

கூகுள் படிவம் இணைப்பு :
https://goo.gl/forms/vh6RtkAyOT0ODzuE2

தகவல் மூலம்: இளம்பகவத் (இந்திய ஆட்சிப்பணி)

TNPSC MATHS 40 QUESTIONS - அளவியல் | PAID BATCH QA

Logical Reasoning  அளவியல்  மற்றும் தருக்கக் காரணவியல்  161. Consider the following statements regarding a rectangle with length 'l'...