Karpathu IAS provides free TNPSC study materials, mock tests, current affairs, general tamil notes, polity MCQs, and exam preparation resources in Tamil.
Check Your Subjects And Materials
Sunday, May 31, 2026
TNPSC Current Affairs - May 31, 2026 | நடப்பு நிகழ்வுகள் TNPSC Daily TEST
TNPSC Current Affairs - May 30, 2026 | நடப்பு நிகழ்வுகள் TNPSC Daily TEST
NHA 2022-23 படி, இந்தியாவில் நடப்பு சுகாதார செலவினங்களில் (CHE) கிட்டத்தட்ட 50% பொதுமக்களின் சொந்த செலவினங்களாக (OOPE) உள்ளன.
அரசு சுகாதார செலவினம் GDP-யில் 1.48% ஆக அதிகரித்தாலும், WHO பரிந்துரையான 5%-ஐ விடவும், தேசிய குறிக்கோளான 2.5%-ஐ விடவும் குறைவாகவே உள்ளது.
தனியார் மருத்துவமனைகளின் பங்கு 30.83% ஆக அதிகமாக இருக்க, மாநில அரசுகள் மொத்த அரசு சுகாதார செலவினத்தில் 63%க்கும் மேல் பங்களிக்கின்றன.
நான்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மற்றும் மூத்த பெண் வழக்கறிஞர் வி. மோகனாவை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நீதிபதிகளின் குழு பரிந்துரை செய்தது.
ஒப்புதல் அளிக்கப்பட்டால், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு நியமிக்கப்படும் முதல் பெண் நீதிபதியாக வி. மோகனா இருப்பார்; கடைசியாக 2021 ஆகஸ்டில் பெண் நீதிபதி நியமிக்கப்பட்டார்.
CJI உட்பட உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கை 32-லிருந்து 38 ஆக அதிகரிக்கப்பட்டதை அடுத்து இப் பரிந்துரைகள் வந்தன.
2026 பிரிக்ஸ் தலைமைத்துவத்தின் கீழ், இந்தியா தனது முதல் பிரிக்ஸ் சுற்றுலா பணிக்குழு (TWG) கூட்டத்திற்கு காணோளி வாயிலாக தலைமை தாங்கியது.
இந்தியாவின் சுற்றுலா நிகழ்ச்சி நிரலின் கருத்துரு "Building for Resilience, Innovation, Cooperation and Sustainability" – AI பயன்பாடு, நிலையான சுற்றுலா ஆகியவை முன்னுரிமை.
இரண்டாவது TWG கூட்டம் மற்றும் பிரிக்ஸ் சுற்றுலா அமைச்சர்கள் கூட்டம் 2026 ஆகஸ்டில் ஜெய்ப்பூரில் நடைபெறும்.
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் பட்டியலிடப்பட்ட சாதியினரின் (SC) நலத்திட்ட அமலாக்கத்திற்காக PM-AJAY இணையதளம் மற்றும் AJAY அலைபேசி செயலியை அறிமுகப்படுத்தியது.
PM-AJAY என்பது 'பிரதான் மந்திரி அனுசுசித் ஜாதி அபியுதாய் யோஜனா' – காகித அடிப்படையிலான வேலைகளை முழுமையான டிஜிட்டல் பணிப்பாய்வாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டது.
AJAY செயலி கிராம அளவில் திட்டமிடல், கள கண்காணிப்பு, புவிக் குறியிடுதல், புகைப்படம் பதிவேற்றுதல் மற்றும் டாஷ்போர்டு அறிக்கைகளுக்கு துணைபுரியும்.
தேசிய விளையாட்டு நிர்வாகச் சட்டம் 2025-ன் கீழ், NSB விதிகள் மற்றும் NST விதிகள், 2026 ஆகியவற்றை மத்திய அரசு அறிவித்தது.
தேசிய விளையாட்டு வாரியம் (NSB) தேசிய விளையாட்டு அமைப்புகளின் அங்கீகாரம் மற்றும் நிர்வாகத்திற்கான உச்ச ஒழுங்குமுறை அமைப்பாக செயல்படும்.
விளையாட்டு தகராறுகளுக்கு தேசிய விளையாட்டுத் தீர்ப்பாயம் (NST) விரைவான தீர்வளிக்கும்; உத்தரவுகளுக்கு எதிராக 30 நாட்களுக்குள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம்.
கூகுள் இந்தியாவில் "Google AI Educator Series (GES)" எனும் இலவச AI பயிற்சி திட்டத்தை பள்ளி மற்றும் உயர்கல்வி ஆசிரியர்களுக்கு அறிவித்தது – லண்டன் கல்வி உலக மன்றம் 2026-ல் தொடங்கப்பட்டது.
மகாராஷ்டிரா, அசாம், சத்தீஸ்கர், லடாக், பஞ்சாப் மற்றும் பிற பகுதிகளைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு Gemini போன்ற AI கருவிகளை பொறுப்புடன் பயன்படுத்துவதில் பயிற்சி அளிக்கும்.
ஆரம்பத்தில் அசாமி, இந்தி, மராத்தி, தெலுங்கு, ஒடியா மற்றும் பஞ்சாபி ஆகிய 6 இந்திய மொழிகளில் கிடைக்கும்.
சட்டவிரோத குடியேற்றம் மற்றும் அசாதாரண இடம்பெயர்வால் ஏற்படும் மக்கள்தொகை மாற்றங்களை ஆய்வு செய்ய மத்திய உள்துறை அமைச்சகம் (MHA) உயர்மட்டக் குழு அமைத்தது.
ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி திரு. பிரகாஷ் பிரபாகர் நவ்லேகர் தலைமையில் இக்குழு எல்லைப் பாதுகாப்பு, பழங்குடியினர் மீதான தாக்கம் ஆகியவற்றை ஆராயும்.
குடியேற்றம் மற்றும் வெளிநாட்டவர் சட்டம் 2025-ன் கீழ் முறையான ஆவணங்கள் இல்லாத குடியேற்றவாசிகளை அடையாளம் காணுதல் மற்றும் நாடுகடத்துதல் நடவடிக்கைகளை இது பரிந்துரைக்கும்.
புதுடில்லியில் குவாட் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பு, இணைப்பு மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்த புதிய முன்னெடுப்புகள் அறிவிக்கப்பட்டன.
குவாட் (இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா) – 'இந்தோ-பசிபிக் கடல்சார் விழிப்புணர்வு' (IPMDA) விரிவுபடுத்தல், 'எதிர்காலத் துறைமுகங்கள்' முன்னெடுப்பு, 'இந்தோ-பசிபிக் எரிசக்தி பாதுகாப்பு' புதிய திட்டம்.
முக்கியமான கனிமங்கள் மற்றும் அரிய வகை தனிமங்களில் ஒத்துழைக்க இந்தியா – அமெரிக்கா 'முக்கிய கனிமங்கள் கட்டமைப்பு' ஒப்பந்தத்தில் கைகெழுத்திட்டன.
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) Q-SAFE (Quantum Secure and Future-ready Financial Ecosystem) எனும் 8 உறுப்பினர்கள் கொண்ட நிபுணர் குழுவை அமைத்தது.
குவாண்டம் தொழில்நுட்பத்தால் இணையப் பாதுகாப்பு, டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் மற்றும் மறைகுறியிடல் அமைப்புகளுக்கு ஏற்படும் அபாயங்களை ஆறு மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கும்.
சென்னை IIT பேராசிரியர் அனில் பிரபாகர் தலைமையில் DST, SBI, NPCI உறுப்பினர்கள் உள்ள இக்குழு குவாண்டம்-பாதுகாப்பான மறைகுறியாக்கத்தை பரிந்துரைக்கும்.
2026 ஜனவரி–ஏப்ரல் காலத்தில் UK-ஐ பின்னுக்குத் தள்ளி இந்தியா இலங்கையின் இரண்டாவது மிகப்பெரிய ஏற்றுமதி நாடாக உருவெடுத்தது; அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
இந்தக் காலகட்டத்தில் இந்தியாவுக்கான இலங்கையின் ஏற்றுமதி 8.9% அதிகரித்து 364.15 மில்லியன் USD ஆனது; 2026 ஏப்ரல் மொத்த ஏற்றுமதி 1.38 பில்லியன் USD – 6% வளர்ச்சி.
ICT மற்றும் BPM சேவை ஏற்றுமதிகள் 146.09 மில்லியன் USD; தேங்காய் சார்ந்த தயாரிப்புகள் வலுவான வளர்ச்சி; ஆடை, ஜவுளியில் சரிவு.
இந்தியா 191 வகையான கரப்பான் பூச்சி இனங்களை பதிவு செய்துள்ளது; இவற்றில் 60%க்கும் அதிகமானவை இந்தியாவில் மட்டுமே வாழக்கூடிய உள்நாட்டு இனங்கள்.
'ஜூடாக்சா' இதழில் வெளியான ZSI ஆய்வு கரப்பான் பூச்சிகளுக்கான இந்தியாவின் முதல் மற்றும் மிகப்பெரிய DNA பட்டைக்குறியீட்டு நூலகத்தை உருவாக்கியுள்ளது; 100+ உயர்தர DNA குறியீடுகள் தயாரிக்கப்பட்டன.
2026 மார்ச்சில் புனேவுக்கு அருகிலுள்ள தக்காண பீடபூமியில் 'நியோலோபோப்டெரா பெனின்சுலாரிஸ்' என்ற புதிய உள்நாட்டு இனம் கண்டறியப்பட்டது.
Saturday, May 30, 2026
புதிய 47கலைச்சொற்கள் TNPSC குரூப் 4 குரூப் 2 | Karpathuias
TNPSC Group 4
| Tamil Nadu Public Service Commission
புதிய கலைச்சொற்கள்
தமிழ் வளர்ச்சிக் கழகம் | Tamil Valarchi Kazhagam
கூட்டம் 1 - 11 | மே 2025 - மார்ச் 2026
★ மொத்தம் 252 கலைச்சொற்கள் ★
💡TNPSC தேர்வு குறிப்பு
|
✔ இந்தச் சொற்கள் TNPSC Group 4 and 2/2A பொதுத்தமிழ் பகுதியில்
அடிக்கடி கேட்கப்படும். ✔ English சொல்
→ Tamil அர்த்தம் என்ற
வரிசையில் மனப்பாடம்
செய்யவும். ✔ புதிய
கூட்டங்களில் சேர்க்கப்படும்
சொற்களையும் நாங்கள்
பதிவிடுவோம் ஆகையால் கற்பது ஐஏஎஸ் டெலிகிராமில் இணைந்து கொள்ளவும். https://t.me/KarpathuIAS |
|
கூட்டம் 11 | மார்ச் 18, 2026 |
30 சொற்கள் |
|
English Word |
தமிழ் சொல் |
|
Bewilderness |
திகைப்பு நிலை |
|
Biodiesel |
உயிரி டீசல் |
|
Brain fog |
மூளை மந்தம் |
|
Co-axial |
இணை அச்சு |
|
Course work |
பாடத்திட்டப்
பணி |
|
Delulu |
மாய்மாலர் |
|
Drinkware |
அருந்து கலன் |
|
Geopolitical |
புவியரசியல் |
|
Gig works |
சிறுகுறு பணிகள் |
|
Hosting |
ஆக்கத்துணை |
|
Hybrid ATM |
பலவகைப் பணப்பணிப்
பொறி |
|
Kitchenware |
அடுகலன் |
|
Leg day |
கால்தசைப் பயிற்சி
நாள் |
|
Mouse jiggler |
சுட்டி அசைப்பான் |
|
Paperwork |
ஆவணப்பணி |
|
Plasticware |
நெகிழிக்கலன் |
|
Power laundry |
மின் சலவையகம் |
|
Preschool |
முன்பருவப்
பள்ளி |
|
Side-eye |
வெறுப்பு நோக்கு |
|
Spot visit |
கள ஆய்வுப்
பணி |
|
Tableaux |
நிலைக்காட்சி |
|
Telecaller |
பணிநோக்கு அழைப்பாளர் |
|
Tours & travels |
சுற்றுலா
& பயணப்பணி |
|
Tradwife |
இல்லாள் / வாழ்க்கைத்
துணை |
|
TTR |
பயணச்சீட்டுக்
கண்காணி |
|
Unfreeze |
முடக்கம் நீக்கு
/ முடக்க நீக்கம் |
|
Water service |
நீர்வழித் தூய்மை |
|
Welding works |
பற்றவைப்புப்
பணி |
|
Wood works |
தச்சுப்பணியகம் |
|
Work wife |
பணியிடத் துணை |
|
கூட்டம் 10 | பிப்ரவரி 18, 2026 |
26 சொற்கள் |
|
English Word |
தமிழ் சொல் |
|
Air shuttle |
விமான வளாக
உந்து |
|
Airport Lounge |
விமானநிலையத்
தனி ஓய்வறை |
|
Angel Fund |
வளர்நல நிதி |
|
Angel investor |
வளர்நல முதலீட்டாளர் |
|
Bread Omelette |
ரொட்டி முட்டையடை |
|
Chicken lollipop |
கோழிக்கறிக்
குச்சியுருண்டை |
|
Face authentication |
முகவழி உறுதி |
|
Grand master |
பெருவாகையர் |
|
Growbag |
செடிவளர் பை |
|
Lip gloss |
இதழ்ப் பொலிவூட்டி |
|
Lookout notice |
தேடல் அறிவிப்பு |
|
M sand |
மாற்று மணல் |
|
Photo gallery |
படக்காட்சியகம் |
|
Photoshoot |
ஒளிப்பட எடுப்பு |
|
Prank call |
பகடி அழைப்பு |
|
Ramp walk |
மேடைநடை |
|
Rumble strips |
வேகத்தடைப்
பட்டை |
|
Satellite Bus |
இணைப் பேருந்து |
|
Semisleeper seat |
சாய்விருக்கை |
|
Sleeper seat |
படுக்கை இருக்கை |
|
Soft bristle |
மெல்லிழைத்
தூரி |
|
Spam call |
பயனிலா அழைப்பு |
|
Tea master |
தேநீர் போடுநர் |
|
Translocation |
இடப்பெயர்வு |
|
Uturn |
எதிர்த்திசைத்
திருப்பம் |
|
Wheelchair ramp |
சக்கரநாற்காலிப்
பாதை |
|
கூட்டம் 9 | ஜனவரி 21, 2026 |
27 சொற்கள் |
|
English Word |
தமிழ் சொல் |
|
Air (verb) |
வானலை ஏற்றுதல் |
|
Autopilot |
தானோட்டி |
|
Baby cell |
முதிரா உயிரணு |
|
Baby corn |
சோளப் பிஞ்சு |
|
Brain rot |
மூளை மழுங்கல் |
|
Crap |
அவையல் கிளவி/செயல் |
|
Deepfake |
பொய்க் காட்சி |
|
Digital detox |
இணையச் சுமை
விடுவிப்பு |
|
Eco Park |
சூழலியல் பூங்கா |
|
Fake job |
பொய்ப் பணி |
|
Ghost job |
பொய்ப் பணி |
|
Hallucination |
காட்சிப் பிழை |
|
Hybrid war |
நுட்பக் கலவைப்
போர் |
|
Kakistocracy |
தகுதியிலார்
ஆட்சி |
|
Menorah |
யூத எழுகிளை
விளக்கு |
|
Money plant |
வளமைக் கொடி |
|
Ostracism |
ஒதுக்கிவைப்பு |
|
Outplay (verb) |
விஞ்சியாடுதல் |
|
Phantom job |
பொய்ப் பணி |
|
Puny |
சின்னஞ்சிறு |
|
Rizz |
கவர்ச்சி |
|
Roomie |
உடன் தங்குநர் |
|
Soft launch |
பகட்டிலாத்
தொடக்கம் |
|
Solipsism |
செருக்கு |
|
Vax |
தடு மருந்து |
|
Wild card |
பதிலி வாய்ப்பு |
|
Xenophile |
அயல் மோகம் |
|
கூட்டம் 8 | டிசம்பர் 17, 2025 |
28 சொற்கள் |
|
English Word |
தமிழ் சொல் |
|
Abnegation |
தன்னல நீக்கம் |
|
Alamak |
ஐயோ |
|
Athleisure |
விளையாட்டுப்பாணி
உடை |
|
Collogen |
தசை வலுவூட்டி |
|
Conundrum |
பெருஞ்சிக்கல் |
|
Culpable homicide |
நோக்கமிலாக்
கொலை |
|
Digital flashcard |
விளக்க மின்
அட்டை |
|
Dowdy |
ஈர்ப்பற்ற |
|
Facetious |
பொருந்தா நகை |
|
Fibonacci day |
ஃபிபோனஸ்ஸி
நாள் |
|
Gigil |
பேருணர்வு |
|
Hangxiety |
போதைப் பின்பதற்றம் |
|
Hidden gem |
மறைமணி |
|
Iconoclast |
கலகக்காரர் |
|
Kidult |
முதுகுழவி |
|
Life writing |
வாழ்வெழுத்து |
|
Ludraman |
மட்டி |
|
Match fixing |
ஆட்டச் சூது |
|
Microgreens |
நுண்ணுயிர்ப்
பயிர் |
|
Physical flashcard |
விளக்க அச்சு
அட்டை |
|
Promptcraft |
கட்டளைத் திறன் |
|
Quandary |
ஊசலாட்டம் |
|
Rage bait |
கெடு உணர்வுத்
தூண்டி |
|
Reps |
மீள் பயிற்சி |
|
Situationship |
உறவு மயக்கம் |
|
Sky ball |
மீவுயர் பந்து |
|
Strong room |
காப்பறை |
|
Yorker |
குறிவீச்சுப்
பந்து |
|
கூட்டம் 7 | நவம்பர் 19, 2025 |
22 சொற்கள் |
|
English Word |
தமிழ் சொல் |
|
Aerofoot |
காற்று நடைக்
காலணி |
|
Air car |
வானுந்து |
|
Air taxi / Flying taxi |
வாடகை வானுந்து |
|
Assistive Technology |
மாற்றுத் திறன்
தொழில்நுட்பம் |
|
Bomber Jacket |
கவச மேலுடை |
|
Brownfield project |
தாளடித் திட்டம் |
|
Combo |
சேர்க்கை |
|
Cyber fraudster |
இணைய மோசடிக்காரர் |
|
Deep-sea mining |
ஆழ்கடல் சுரங்கப்பணி |
|
Digital connectivity |
இணையத் தொடர்பு |
|
Digital infrastructure |
இணையக் கட்டமைப்பு |
|
Fast Breeder Test Reactor |
அணுமின் விரைவாக்க
உலை |
|
Global governance |
புவி ஆளுகை |
|
Greenfield project |
முதலடித் திட்டம் |
|
Intraday trading |
நாள் பங்கு
வணிகம் |
|
OTT |
இணையப் படத்
தளம் |
|
Plastic surgeon |
மெய்சீர் மருத்துவர் |
|
Rapid Stroke Response Team |
பக்கவாத மருத்துவ
விரைவுக் குழு |
|
Water walking shoes |
நீர்மிசைக்
காலணி |
|
White collar terrorism |
அறிவுக் கயவர்
பயங்கரவாதம் |
|
Wind farm / Wind park |
காற்றாலைப்
பண்ணை |
|
Zeptosecond |
நுண்ணொடி |
|
கூட்டம் 6 | அக்டோபர் 15, 2025 |
13 சொற்கள் |
|
English Word |
தமிழ் சொல் |
|
Animal pass over |
கால்நடைக் கடவை |
|
Cockpit door |
விமானிக் காப்பறைக்
கதவு |
|
Elephant corridor |
யானை வழித்
தடம் |
|
Glue stick |
பசைக் குச்சி |
|
Hair spray |
முடி தெளிப்பி |
|
Lockup death |
காவல் சிறைச்
சாவு |
|
Off campus |
புற வளாகம் |
|
Stablecoin |
நிலைமதிப்பு
நாணயம் |
|
Stealth bomber |
கரவுப் படை
விமானம் |
|
Tongue cleaner |
நாத் துலக்கி |
|
Visual story |
காட்சிக் கதை |
|
War room |
தீர்வுகாண்
களம் |
|
Zipline |
சறுக்கு வடம் |
|
கூட்டம் 5 | செப்டம்பர் 19, 2025 |
26 சொற்கள் |
|
English Word |
தமிழ் சொல் |
|
Academy |
கலைக்கழகம் |
|
ANPR camera |
ஊர்தி எண் காணி |
|
Badge |
அடையாள வில்லை |
|
Biomining |
நுண்ணுயிரி
அகழ்வு |
|
Biopic |
வாழ்க்கைப்
படம் |
|
Bonanza |
அதிரடிப் பயன் |
|
CAPTCHA |
ஆளறி குறி |
|
CCTV camera |
கண்காணி |
|
Champion |
வாகையர் |
|
Championship |
வாகைநிலை |
|
Chip |
சில்லு |
|
Client |
பயனி |
|
Deepfake |
பொய்க் காட்சி |
|
Game |
விளையாட்டு/ஆட்டம் |
|
Gated community |
காப்புக் குடியிருப்பு |
|
Hawala |
முறையிலாப்
பரிமாற்றம் |
|
Hologram |
முப்பரிமாண
ஒளிப்படம் |
|
Infotainment |
தகவல்போக்கு |
|
Metacognition |
மீ அறிதிறன் |
|
QR code |
விரைவு வினைக்குறி |
|
Real estate |
நில வணிகம் |
|
Screen shot |
திரைப் பதிவுப்
படி |
|
Timeline |
கால வரிசை |
|
Tournament |
காலநிலை விளையாட்டு |
|
Trendsetter |
புதுப்போக்கு
ஆக்குநர் |
|
Winner |
வெற்றியாளர் |
|
கூட்டம் 4 | ஆகஸ்ட் 26, 2025 |
22 சொற்கள் |
|
English Word |
தமிழ் சொல் |
|
Angiogram |
குருதிநாளப்
பதிவு |
|
Bollywood |
இந்தித் திரையுலகம் |
|
Hollywood |
அமெரிக்கத்
திரையுலகம் |
|
Kollywood |
தமிழ்த் திரையுலகம் |
|
OTP |
ஒருநேரக் கடவி |
|
Parole |
காலப்பிணை |
|
Passive income |
நிழல் வருமானம் |
|
Podcast |
வலையொலி |
|
Premium |
உயர்தரம்/சிறப்பு
நிலை |
|
Rowdyism |
போக்கிலித்தனம் |
|
Smart card |
திறன் அட்டை |
|
Smart speaker |
திறன் ஒலிபெருக்கி |
|
Start up |
புத்தாக்கம் |
|
Stent |
செய்நாளம் |
|
Tatkal |
உடனடி |
|
Techpreneur |
தொழில்நுட்ப
முனைவோர் |
|
Theme park |
பொருண்மைப்
பூங்கா |
|
Trending |
பேசுபொருள்/போக்குநிலை |
|
Tubeless tyre |
காற்றடை வட்டை |
|
Valet parking |
ஊர்தி நிறுத்த
உதவி |
|
Vibe coding |
உணர்நிரலக்
குறியாக்கம் |
|
WiFi |
அருகலை |
|
கூட்டம் 3 | ஜூலை 23, 2025 |
21 சொற்கள் |
|
English Word |
தமிழ் சொல் |
|
Altcoin |
இணைய மாற்றுக்காசு |
|
Bitcoin |
இணையக்காசு |
|
Blockbuster |
வணிக வெற்றி |
|
Bouncer |
மெய்க்காவலர் |
|
Collegium |
நெறியாயம் |
|
Cryptocurrency |
இணைய மறைநாணயம் |
|
Ethereum |
ஈத்தர் குறிக்காசு |
|
Gate keeper |
வாயில் காவலர் |
|
Loco pilot |
தொடரியோட்டி
/ இரயில் ஓட்டி |
|
Multi-level parking |
அடுக்கு நிறுத்தகம் |
|
Orange economy |
ஆக்கநிலைப்
பொருளாதாரம் |
|
Postpaid |
பின்பணம் |
|
Prepaid |
முன்பணம் |
|
Road show |
வீதியுலா |
|
Rope car |
வடவூர்தி |
|
Smart City |
திறன்வள நகர் |
|
Smart meter |
திறன் மானி |
|
Smart TV |
திறன் தொலைக்காட்சி |
|
Smart watch |
திறன் கடிகாரம் |
|
Surgical strike |
இலக்கழி தாக்குதல் |
|
Warranty |
காப்புறுதி |
|
கூட்டம் 2 | ஜூன் 25, 2025 |
18 சொற்கள் |
|
English Word |
தமிழ் சொல் |
|
Airbase |
வான்படைத் தளம் |
|
Artificial General
Intelligence |
பொதுச் செய்யறிவு |
|
Artificial Super
Intelligence |
மீச்செய்யறிவு |
|
Ballistic missile |
தொலையீர்ப்பு
ஏவுகணை |
|
Barricade |
தடையரண் |
|
Bulldozer |
இடிவண்டி |
|
Drone |
வானீ/வானுலவி |
|
Electric cooktop |
மின்னடுப்பு
மேடை |
|
Foodpreneur |
உணவியல் முனைவோர் |
|
Hyperloop track |
தூம்பு வழித்தடம் |
|
Hypersonic weapon |
விஞ்சொலிப்
படைக்கலன் |
|
Induction cooktop |
மின்னலை அடுப்புமேடை |
|
Jet aircraft |
பாய்விசை வான்கலன் |
|
Laser |
கதிரியக்கம் |
|
Launchpad |
ஏவுதளம் |
|
Microwave oven |
நுண்ணலை அடுப்பு |
|
Social media post |
சமூக ஊடக இடுகை |
|
Social media story |
சமூக ஊடக மொழிவு
இடுகை |
|
கூட்டம் 1 | மே 21, 2025 |
19 சொற்கள் |
|
English Word |
தமிழ் சொல் |
|
Artificial Intelligence |
செய்யறிவு |
|
Bluetooth |
ஊடலை |
|
Breaking news |
அதிர்வுச் செய்தி |
|
Bullet train |
மின் வேகத்
தொடரி |
|
Chatbot |
உரையாடி |
|
Data card |
தரவட்டை |
|
Dating |
காதலுணர் காலம் |
|
Default |
இயனிலை |
|
Disc brake |
வட்டுத் தடை |
|
Ear phone |
செவி பேசி |
|
Electric chimney |
மின் புகைபோக்கி |
|
Encrypted Data |
குறியாக்கத்
தரவு |
|
Encryption |
குறியாக்கம் |
|
Ethical hacking |
நன்னோக்க முடக்கம் |
|
Fibre cable |
இழைவடம் |
|
Firmware |
நிலை பொருள் |
|
Game changer |
ஆட்ட மாற்றி |
|
GIF file |
இழப்பிலாப்
பட மாற்றிக் கோப்பு |
|
Malware |
கெடுபொருள் |
★ TNPSC Group 4 | General Tamil | புதிய கலைச்சொற்கள் ★
குரூப் 4 தேர்வுக்கு கண்டிப்பாக பார்க்கவும் 👇🏻👇🏻👇🏻
Development Indicators for TNPSC / UPSC Exam 2025
Economic and Development Indicators: · World Economic Outlook 2025 (IMF): India is projected to be the 4th largest economy . ·...